Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]



நம்முடைய சமையலறையில் இருக்கும் மருத்துவ உணவுப் பொருட்களில் மிகவும் முக்கியப்பங்கு வகிப்பது வெள்ளைப் பூண்டு. தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளில் கண்டிப்பாக பூண்டுக்கு இடம் உண்டு. மருத்துவ குணம் வாய்ந்த பூண்டின் மகத்துவத்தை இங்கே பார்ப்போம்.

* பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

* பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.

* பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.

* வெள்ளைப்பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.

* பூண்டை சாப்பிட்டவுடன் கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.

* சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்த சூப் கொடுங்கள்.

* வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம். வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.

* பூண்டு, அதே அளவு வெற்றிலையும் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசி ஊறவிட்டு கழுவவும். இப்படி தொடர்ந்து செய்தால் மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்து விடும்.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]