Travel the world
Climb the mountains
Post Page Advertisement [Top]
உடற்பருமனைக் குறைக்க வழி உடல் எடையைக் குறைப்பதற்காக எடுத்த உணவுகளினால் எடைகுறையாமல் விரக்தியா? எல்லா முறைகளிலும் கொழுப்பு உண்பதைக் குறைத்தாலும் எடை இன்னும் போடுகிறதா? நீண்ட காலமாக உணவில் அதிகரித்த வெல்லம அல்லது மாச்சத்து மற்றும் உணவுகளை உண்டுவந்திருப்பதனால், தற்பொழுது உடலானது மாச்சத்து ஆக்கசிதைவுச்செயற்பாடுகளை செவ்வனே செய்ய முடியாது போய்விடுகிறது. அத்துடன் மேலதிக மாச்சத்து கொழுப்பாக உடலில்; குறிப்பாக உடலின் இடைப்பகுதியில் சேமிக்கப்படுகிறது. எமது உணவில் கொழுப்பினளவையும், அது தரும் சக்தியின் கலோரிக் அளவையும் கவனத்தில் கொள்ளும் நாம் எமக்குத் தெரியாமலே அதிகமாக வெல்லம் அல்லது மாச்சத்து உள்ளெடுத்துவிடுகின்றோம். பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் தற்பொழுது எமது மூதாதையரைக் காட்டிலும் 25 மடங்கு சீனியை அதிகமாக உட்கொள்கின்றனர். இவற்றில் பெரும்பான்மையானவை முன் தாயாரிக்கப்பட்ட உணவுகளில் ஒளிந்து கிடக்கிறது. அதிகமான சீனி அளவைக் கொண்ட உணவை உண்ணும் பொழுது, மிகவும் விரைவாக குருதியில் வெல்ல அளவு அதிகரிக்கிறது. திடீரென அதிகரித்த வெல்ல அளவு உடலின் ஆக்கச்சிதைவு தொழிற்பாட்டைப பாதிப்பதனால், மேலதிகமான சீனி அல்லது வெல்லம் அகற்றப்பட முடியாமல் கொழுப்புக் கலங்களில் சேமிக்கப்படுகிறது. ஏதாவதொரு உணவு மிகவிரைவாக குருதியில் வெல்ல அளவை அதிகரிக்குமானால் அது உயர் குருதி வெல்லக் குறியீடு கொண்டது எனக் குறிப்பிடலாம். குருதியில் வெல்ல அளவு அதிகமாக காணப்படும் பொழுது மேலதிக வெல்லத்தை மாற்றி சேமிப்பு செய்வதற்காக பெருமளவில் இன்சுலின் சுரக்கப்படுகிறது.
இதை எண்ணிப் பார்ப்போமேயானால் நாம் ஒவ்வொருவரும் பல தடவைகளில் அதிகமான வெல்ல அளவினைக் கொண்டவர்களாக இருந்திருப்போம். சீனி போட்டு தயாரித்த பானங்கள், கேக் வகைகள், உணவுக்கு பின்னர் உண்ணும் இனிப்புணவுகள் குறியீட்டளவில் உயர்ந்ததாக காணப்படும். வேறு பல உணவுகளும், உதாரணமாக ஜக்கெற் பொட்ரற்ரோ பிரஞ் பிரைஸ், வெள்ளை அரிசிச் சோறு, வெள்ளைப் பாண் (வைற் பிறட்) போன்றனவும் குருதியில் உயர் வெல்லளவைத் தரும் குறியீட்டைக் கொண்டுள்ளன. மேற்கத்தேய நாடுகளில் நாமுண்ணும் உணவுகள் சராசரியாக பெருமளவு உயர் குருதி வெல்லம் தரும் குறியீட்டைக் கொண்ட உணவுகளே அதிகம் காணப்படுகின்றன. எமது குருதியில் பெரும்பான்மையான நேரங்களில் வெல்லத்தின் அளவு அதிகரிக்கும் போது, சதையிக்கு மேலதிகமான வெல்;லத்தை (குளுக்கோஸ்) சக்தி சேமிப்புக் கலங்களில் சேமித்து வைக்குமாறு செய்தி சொல்லப்படுகின்றது. இந்த வெல்ல சேமிப்புக்கான மாற்றத்தை நிகழ்த்த, சதையிலிருந்து விடுவிக்கப்படும் இன்சுலின் தேவையானதாகும். குருதியில் மிகவும் உயர்ந்தளவு வெல்லத்தின் அளவு உடல் நலனுக்கு ஆபத்தானதாகும். சேமிப்புக் கலங்களில், தசை, ஈரல் கலங்கள் முதன்மை பெறுகின்றன. இன்னும் எஞ்சிய குருதி வெல்லம் கொழுப்பாக எமது கொழுப்புக் கலன்களில் சேமிக்கப்படுகின்றது. எப்படியாயினும், உயர்ந்த வெல்லளவுள்ள உணவுகளும் பெரும்பாலும் ஓரிடத்திலமர்ந்த வண்ணம் வேலை செய்யும் எம்மவரின் பலரின் வெல்ல சேமிப்புக் கலங்கள் பொதுவாக நிரம்பிய இருக்கும். இக்கலங்கள் மிகவும் நிரம்பியிருப்பதால் கலங்கள் ஊதிப் (உப்பிப்) போயிருக்கும். இந்நிலையில் உடல் பருமனடைந்ததாக இருக்கும். இந்நிலையில் சேமிப்புக்கலங்கள் மேலும் குளுக்கோஸை உள்ளெடுக்க முடியாத நிலையில், மேலதிகமான குளுக்கோஸ் வெல்லச் சுற்றோட்டத்தில் சுற்றிச் செல்லும். இது பொதுவான ஆக்கச் சிதைவுச் செயற்பாட்டினை தரம் குறைக்கச் செய்வதுடன், குருதிக் குழாய்களில், சிறுநீரகம், விழித்திரை ஆகியவற்றினையும் பெரும்பாலும் பாதிக்கக்கூடும். எம்மில் ஐவரில் ஒருவருக்கு, மிகவதிகவளவான குருதி வெல்லம் காணப்படுவதாகவும், நீண்ட காலமாக உயர்ந்த அளவில் இன்சுலின் சுரக்கப்படுவதினால் நடைபெறும் ஆக்கச்சிதைவு தாக்கங்களை எதிர்த்து சமாளித்துப் போக இவர்களால் முடியாதிருப்பதாகவும் வைத்தியர்கள் கூறுகிறார்கள். சேமிப்புக் கலங்கள வெல்லத்தால் மிகவும் நிரம்பியிருப்பதனால், வெல்லத்தை மேலும் சேமிக்கச் செய்யும்படி இன்சுலின் தரும் தூண்டல்களை செய்ய முடிவதில்லை. அத்துடன் குருதியிலிருந்து வெல்லத்தை அகற்ற இன்சுலின் தரும் செய்தியை கவனத்திலெடுக்காத கலங்களாக மாற்றப்பட்டுவிடுகின்றன. இதன் விளைவாக குருதியில் வெல்ல அளவு அதிகரிக்கும் அதே வேளை குறைந்த அளவிலான கலங்களிலேயே சேமிக்கப்படக்கூடிய நிலையில், குருதியில் வெல்லம் அதிகரித்து இருப்பதனால் இன்னும் அதகமான இன்சுலினைச் சுரக்கும் வண்ணம் சதையம் தூண்டப்படுகிறது. இந்நிலைமை மிகவும் ஆபத்தானதொரு ஆக்கச் சிதைவு சமநிலைக் குழப்பத்தை ஏற்ப்படுத்துவதனால், பல கடுமையான நோய்நிலைகளான கட்டாக்காலி முழுமைபெறாத அணுக்களினால் ஏற்படும் சேதம் (பிறி றடிகல்ஸ் டமேச்), உயர் குருதி அழுத்தம், வழமைக்கு மாறான குருதியழுத்தம் (கைபரென்சன்), குருதியில் ஆரோக்கியமற்ற கொழுப்பு சேர்மானங்கள், நீரிழிவு வகை 2 போன்றன தோன்றுகின்றன. மனவழுத்த நிலையும இன்சுலின் எதிர்ப்பு நிலையுடன் இணைந்து செயற்படும் பொழுது, உடல் இயற்கையாக குளுக்கோஸ், கொழுப்பமிலங்களை குருதியினுள் விடுவிக்கின்றது. மேலும் இது மூளையைத் தூண்டி மனவழுத்த ஓமோன்களை விடுவிக்கும் பொழுது, இவை சேமிப்புக் கலங்களை மேலும் இன்சுலின் தூண்டலிற்கு உணர்வற்றதாக்குகின்றது. இந்த சூழ்நிலையில் கொழுப்புக் கலங்கள் இயற்கைக்கு மாறாக ஊதி உப்பிப் போகின்றன. மேலும் இவை புதிதான கொழுப்பு கலங்களை உற்பத்தி செய்கின்றன.
இன்சுலின் எதிர்ப்புத் தன்மை தோன்றியவர்களிடத்தில் இடுப்பிலும், கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் உப்பிய நிலை தெரியும். இப்பொழுதில் இந்நிலை உள்ளவர்களின் உடல் பருமன் அதிகரிக்கும். உடலின் உருவம் பியர் பழம் போன்று மேற்பகுதி சிறுத்தும் இடைப்பகுதி பெருத்தும் காணப்படவேண்டிய வடிவத்திலிருந்து அப்பிள் வடிவத்திற்கு அதாவது மேல் பகுதியும் பருத்து இடைப்பகுதி மிகவும் பருத்து குண்டாக மாறிவிடுவர், முகம் வட்டவடிவம் (முழு சந்திர வடிவம்) பெறும். வெளித் தோற்றத்திலிருந்தே ஒருவர் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை ஏற்ப்பட்டதனால் உடல் எடை அதிகரிப்பு ஏற்ப்பட்டதா எனக் கூறமுடியும். இவற்றுடன் கூட, நீண்ட நாளாக களைப்பு, சிந்தனைத தெளிவின்மை காதுச் சோணை மடிப்புகள், தோல் மடிப்புகள், இனிப்பு பண்டங்களுக்கு வரம்பு கடந்த விருப்பம் போன்றன தெளிவாக தென்படும். நீங்கள் பின்வருவனவற்றால் பாதிக்கப்படுகின்றீர்களா? - அதிகளவு உடல் கொழுப்பு - வெல்லம் செறிந்த உணவுக்கும் பானங்களுக்கும் அவாவுதல். - உயர் குருதியழுத்தம் - நீண்ட நாளாக சக்தியற்ற நிலை, உற்சாகமின்மை. - சிந்தனை தெளிவின்மை – துரிதமாக, உடனடியாக கூர்மையாக சிந்திக்க முடியாமலிருத்தல். - தசை தடிப்புக்கள் - கழுத்து, இறைப்பகுதி, அக்குள் பகுதிகளில் காணப்படும். - உணவின் பின்னர் வயிறூதிய உணர்வு - உலர்ந்த, செதில் போன்ற தோல், வெடிக்கும் நகம், நலிந்த கேசம். - மூலைவிட்ட கோட்டிலமைந்து காதுச்சோணை மடிப்பு - உடல் தோற்றம் இடுப்பிற்கு மேலாக அப்பிள் போன்றிருத்தல் - சாப்பிட்ட பின் மிகவும் அதிகமாக களைப்பாகவிருத்தல் - முடியும், நகமும் உலந்து உடையும் தகவுடையதாகவிருத்தல் - தோலின் வாழிப்புத்தன்மை குறைந்து போதல். உடற்பருமனைக் குறைப்பதற்கான உணவுத் திட்டம் (டயற் பிளான்): உணவுத் திட்டமொன்றில் குருதி வெல்ல அளவுக் குறிகாட்டி (கிளைசீமிக் இன்டெக்ஸ்) உணவுகளின் அடிப்படையில், நிலையான குருதி வெல்ல அளவைத் தரும் வகையில் அமைய வேண்டும். இதனைப் பின்பற்றும் பொழுது ஆரோக்கியமான ஆக்கச் சிதைவு பேணப்படுகிறது. குருதி வெல்ல அளவைக் குறைத்தல், இன்சுலின் அளவைக் குறைத்தல் ஆகியவை தான், உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த வழிகளாகும். பின்வரும் வழிமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இதனை அடையலாம்.
1. உயர் வெல்லக் குறியீடு கொண்ட உணவை முற்றாக அகற்றவேண்டும் அல்லது மிகவும் குறைக்கவேண்டும். உயர் வெல்லக் குறியீடு கொண்ட உணவுவகைகள் (உயர் குறி தாழ் குறி இறங்கு வரிசை) வெள்ளை அரிசி, வெள்ளைப் பாண், வெதுப்பிய உருளைக்கிழங்கு (ஜக்கெற் பொட்ரற்ரோ), அரிசிக்கேக்.
2. தினந்தோறும் 30 நிமிட தேகப்பியாசம்: சேமிக்கப்பட்ட கொழுப்பைப் பயன்படுத்த தினமும் 30 நிமிடம் நடந்தாலே, நிறைகுறைக்கும் பாதையின் ஆரம்பத்தில் நடக்கத் தொடங்கிவிடுவீர்கள். ஏதாவது சிறப்பான உடல் அப்பியாசங்களை தொடங்க உத்தேசித்தால் உங்கள் வைத்தியருடன் ஆலோசனை செய்யவும்.
3. நிரம்பிய கொழுப்புகளைக்கொண்ட (உ-ம் சிவப்பு இறைச்சி, பேஸ்றீஸ், பாலுணவுகள்), மாற்றப்பட்ட கொழுப்பமிலத்தைக் கொண்ட உணவுகள் (மார்கறின்ஸ், மாற்றம் செய்யப்பட்ட தாவர எண்ணெய்கள் (றிபைண்ட் வெயிற்ரபிள் ஒயில்), தயார் செய்யப்பட்ட உணவுகள் (புறோசெஸ் பூட்), இவை யாவும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மையைத் தோற்றுவிக்கின்றன. அதுவும் உயரளவு வெல்ல உணவுகளை உட்கொள்ளும் பொழுது இன்னும் அதிகமாகிறது.
4. நார்ச்சத்துணவுகளை கொண்ட முழு உணவுகளை உண்ணவேண்டும்: இவற்றை முழு உணவுகளாக உட்கொள்ளும் பொழுது, மேலதிகமான போசாக்குப் பொருட்கள் கிடைப்பதோடு உணவிலுள்ள வெல்லம் தாமதமாகவே குருதியில் கலக்கின்றது.
5. தினமும் நிறையுணவு: தினமும் எமதுணவில் 55சதவீதம் மாப்பொருள் (வெல்லக் குறியீடு குறைந்தவை), 30 சதவீதம் கொழுப்பு ( நிரம்பிய கொழுப்பைத் தவிர்க்கவும்), 15 சதவீதம் புரதம் (இரத்த சிவப்பு இறைச்சி வகைகளைக் தவிர்க்கவும்) ஆகிய அளவுகளில் கலந்திருக்கவேண்டுமென அறிவுரை கூறப்படுகிறது.
6. இயற்கையாக விளைந்த சேதன (ஓகானிக்) உணவுகள்: இயற்கையாக விளைந்த உணவுகளை (ஓகானிக்) முடிந்தவரை உண்ணவும். வியாபார ரீதியாக விளைவிக்கப்படும் உணவுகளில் போசாக்குப் பொருட்களின் அளவு குறைவாக காணப்படுவதோடு, நச்சுப் பொருட்களும், வேறு இரசாயனங்களும் காணப்படுகின்றன.
7. சேமிப்புக் கலங்களிலுள்ள கொழுப்பை எரிக்கவும், இக்கலங்கள் ஏற்படுத்தும் குருதியில் உள்ள வெல்ல, இன்சுலின் உயர் அளவுகளினால் ஏற்படும் பாதகமான விளைவுகளினின்று பாதுகாக்கவும் வேண்டிய குறிப்பிட்ட உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் ஏனைய போசாக்குப் பொருட்களாகியவற்றை உணவுக் குறைநிரப்பிகளாக எடுக்கவேண்டும். இது மீண்டும் உடல் நலம் பெறும் வேகத்தை அதிகப்படுத்துகின்றன.
மூலிகை கலவை: மூலிகை கலவையான கோலா நட் அன்ட் கெல்ப் பிளஸ், நன்மைபயக்கும். வெயிற் மனேஞ்மென்ற் போமிலா: உடல் எடையைப் பேணுவதற்காக நான்கு மூலிகைகளின் சேர்மானத்தில் செய்யப்பட்ட மூலிகை மருந்துக்கலவையாகும். கூகுல், ஆட்டிசோக், கோலா நட், பிளாடரெக்; ஆகிய நான்கு மூலிகைகளைக் கொண்டிதாகும். இச்சேர்மானம் இயற்கையான எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இந்த மூலிகைச் சேர்மானம் உயர் குருதி அழுத்தம், இதய வருத்தம் போன்ற சிக்கலான, எடை அதிகரித்ததால் ஏற்படும் நோய் நிலைகளிலிருந்து நீங்கி வரவும் உதவி செய்யக்கூடும். கூகுல்: லசசா மரத்தில் வடியும் பிசினிலிருந்து கிடைக்கும் இம்மருந்து, உடல் நிறையைக் குறைக்கவும், மூட்டுக்களில் நல்ல அசைவை ஏற்படுத்தவும், ஆரோக்கியமான இதயத்தைப் பேணவும், தொன்று தொட்டு ஆயுர்வேத வைத்தியத்தில் பயன்பட்டு வந்துள்ளது. இதில் காணப்படும் கூகுல் ஸரெறோன்ஸ் எனப்படும் பதார்த்தம் எல் டி எல் கொழுப்பை ஒட்;சியேற்றம் செய்யாது தடுப்பதனால் ஆரோக்கியமான நாடிக்குழாய்களைப் பேணுகிறது. மேலும் இது தைரோட்டு ஓமோன் அளவை அதிகரித்து அடிப்படையான ஆக்கச் சிதைவு மட்டத்தை நிகழ்த்துவதனால் கொழுப்பு சேர்மானத்தைக் குறைத்து நிறை குறைய உதவுகிறது. ஆட்டிசோக்: இதில் சையநாரின் என்னும் இரசாயம், ஈரலின் தொழிற்பாட்டை நன்றே பேணுவதனால், ஆரோக்கியமான கொலஸ்ரோல் அளவை வைத்துக்கொள்கிறது. மேலும் ஈரலில் மேலதிகமாக் கொலஸ்ரோல் உற்பத்தியை தடைசெய்கிறது. அத்துடன் கொழுப்பு ஆக்கச் சிதைவையும் தூண்டி எடைக் குறைப்புக்கு உதவிசெய்கின்றது. கோலா நட்: இந்த மூலிகை உணவுக்கு அவாவுவதை குறைப்பதனால் பசியையும்; குறைக்கிறது. மேலும் சக்திக்கான ஆக்கச்சிதைவை உந்தித் தள்ளிவிடுகிறது. பிளாடரெக்: இந்த மூலிகையானது தைரோயிட்டின் செயற்பாட்டை ஒழுங்கு செய்வதற்காகவும், தைரோயிட் சுரப்பி வீங்கிய பொழுதிலும் (கொயிற்ரர்), உடல் பருமனானவர்களின் எடைக் குறைப்பிற்குமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இது தைரோயிட் சுரப்பியின் செயற்பாட்டை திறம்பட செய்ய தூண்டுவதனால் உடலின் ஆக்கச் சிதைவு தாக்கங்களை அதிகரிக்கச் செய்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
ஆட்டிசோக் தகவலுக்கு நன்றி...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
Post a Comment --> Click ---> http://siddhamaruthuvakuripugal.blogspot.in/2010/05/25.html#comment-form
ReplyDeleteஉங்கள் தளத்தில் எவ்வாறு கருத்துரை இடுவது என்று கூறினால் மிக்க நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_5267.htm) சென்று பார்க்கவும்... நன்றி...