Travel the world
Climb the mountains
Post Page Advertisement [Top]
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும்
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும்
மித மிஞ்சிய மற்றும் குறைவான தூக்கம் உயிராபத்தை ஏற்படுத்தும் என பிரித்தானிய மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறைவாக உறங்குவோரும், அதிகமாக உறங்குவோரும் உயிராபத்தை எதிர்நோக்கிவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆறு மணித்தியாலங்களுக்கு குறைவாக உறங்குவோர் நோய்களினால் பீடிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால் உயிரிழக்க நேரிடலாம் எனவும் பிரித்தானிய மற்றும் இத்தாலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நபர் ஒருவர் சராசரியாக ஆறு முதல் எட்டு மணித்தியாலங்கள் வரையில் உறங்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒன்பது மணித்தியாலங்களுக்கு மேல் உறங்குவோரும் இதேபோன்று மரண அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகளவான உறக்கம் நோய்களுக்கான அறிகுறியாகவே கணிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1.5 மில்லியன் மக்களிடம் 16 விதமான ஆய்வுகளின் பின்னர் அந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இறப்பு வீதத்திற்கும் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய வாழ்க்கை முறைமையின் அடிப்படையில் சீரான உறக்கத்தைப் பேணுவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உணவு, நீர் போன்ற சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு உறக்கமும் இன்றியமையாததென்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக ஐந்து மணித்தியாலத்திற்கு குறைவாக உறங்குவோர் தமது உடல் ஆரோக்கியம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
உறக்கமின்மை மன அழுத்தம் ஏற்படுவதற்கான பிரதான ஏதுக்களில் ஒன்று என சுட்டிக்காட்டியுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment