Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

தங்களுடைய பற்கள் வெள்ளை நிறத்துடன் அழகாக பளிச்சிட வேண்டும் என்பது எல்லோருக்கும் ஆசை இருக்கும். ஆனால் அந்த வெள்ளை என்பது பற்களின் நிறமல்ல... எனாமலின் நிறம். இதில் அழுக்கு, கறை படிவதால் வெள்ளை நிறம் மங்கி மஞ்சள் நிறமாகி விடுகிறது. மீண்டும் வெள்ளை நிறம் பெறுவதற்கு வீட்டிலேயே `ஒயிட்டனிங்' செய்யலாம். இதனால் பாதுகாப்பு மற்றும் செலவு குறைவு.

பற்களின் அழகு மற்றும் ஆரோக்கியம் கெடுவதற்கு சில பழக்க வழக்கங்களே காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள். வெற்றிலை போடுவது, புகை பிடித்தல், மது அருந்துவது, டீ, காபி அதிகமாக குடிப்பவை போன்ற பழக்கவழக்கங்கள் வாயில் நோயை உண்டாக்கி, பற்களை கெடுக்கும். இதனால் பற்களில் கறை படிந்து கெட்டுவிடும்.
அதேபோல் ஊசி, கத்தி போன்றவற்றின் மூலம் பற்களை குத்துவதாலும் கெடும். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், பற்கள் தேய்மானம் ஆகும்.

பலருக்கு இரவில் தூங்கும்போது பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கும். குறிப்பாக சிறுவர், சிறுமியர் நகம் கடிப்பார்கள். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம்தான். இதனால் பற்கள் மழுங்க ஆரம்பிக்கும். இதனால் அவர்களிடம் பெற்றோர்கள் பேசி, மன அழுத்தத்தை தீர்த்து வைக்கலாம்.

அதேபோல், சில குழந்தைகளுக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும், இதுவும் பல்லுக்கு பாதிப்புதான். மேலும் விரல் சூப்புவதால், முன்பகுதி பற்கள் முன்னோக்கி வளர்ந்து அசிங்கமாக இருக்கும். இதனால் அந்த குழந்தைகளுக்கு விரல் சூப்பும் நேரத்தில் வேறு நல்ல பழக்கத்தை கற்றுக் கொடுத்து அதை மாற்றலாம்.

பெரியவர்களுக்கு நீரிழிவு பிரச்சினை இருந்தாலும், பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சினை ஏற்படும். ஈறுகளில் சீல் வைத்து ரத்தம் வெளியேறும். இதனால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே பாக்டீரியாக்கள் அதிகமாகி... வாயுக்குள் சென்று இதயத்தை அடைவதால் அங்குள்ள வால்வை பாதிக்கும். இதன் காரணமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

வாயில் புண் வந்தாலும் பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து இதயத்தை பாதிக்கும். புகையிலை, வெற்றிலை, மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் புற்று நோய் ஏற்படும். கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களில் அதிகமான பேருக்கு புற்று நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் பான்மசாலா பழக்கம்தான்.

பெண்களுக்கும் கர்ப்பகாலத்தில் ஹார்மோன் வித்தியாசத்தால் பற்களில் `பிளாக்' செயல்பாடு அதிகரிக்கும். இதனால் ஈறு நோய் வரும். இதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.

ஈறு நோய் தாக்கப்பட்ட கர்ப்பிணிகள், ஆபரேஷன் செய்வதாக இருந்தால், கர்ப்பம் தரித்து 4, 5, 6 மாதங்களுக்குள் செய்யவேண்டும். இல்லாவிட்டால் ஆபத்தாகிவிடும். கர்ப்பகாலத்தில் சில ஈறுநோய்கள் வந்து, பிரசவம் ஆனபிறகு மறைந்து விடும். தொடர்ந்து தொல்லை இருந்தால் மட்டும் டாக்டரிடம் காட்டுவது நல்லது.

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]