Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

இஸ்லாம் தோன்றிய காலத்தில், அரபு நாட்டில் மக்கள் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். நோய்களால் பலர் பலவீனமடைந்திருந்தார்கள். அவர்களுக்கு நிவாரணியாக “ஜவ்” என்னும் பார்லி அரிசி அமைந்தது. இதை ஜவ்வரிசி என்று அழைப்பார்கள்.
பார்லி ரொட்டியுடன் சுரைக்காய், இறைச்சிக் குழம்பு சேர்த்து சாப்பிடுவது என்றால் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று புகாரி, முஸ்லிம் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது. பார்லி ரொட்டிக்கு குழம்பாக பேரீச்சம் பழத்தைச் சேர்த்து பெருமானார் அவர்கள் சாப்பிட்டதாக அபூதாவூத் ஹதீஸ் கூறுகிறது. பார்லி அரிசியை இடித்து அதைப் பாலில் கொதிக்க வைத்து, சுவைக்காக தேன் கலந்த ஒருவிதமான கஞ்சியை பெருமானார் வீட்டில் சமைப்பார்கள். இதற்கு அரபு மொழியில் “தல்வீணா” என்று பெயர். வீட்டில் யாராவது உடல் நலமின்றி இருந்தால் அவர்கள் பூரண குணம் பெறும்வரை “தல்வீனா” கஞ்சி தயாரித்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார்களாம்.
சிலரின் மரணத்தால் குடும்பத்தினருக்கு ஏற்படும் துக்கம், கவலை, அதிர்ச்சி, சோர்வு, பயம், கோழைத்தனம் நீங்கி தைரியத்தை உண்டாக்க “தல்வீனா” கஞ்சியைக் குடிக்க பெருமானார் அவர்கள் கூறி இருக்கின்றார்கள். முகத்தைத் தண்ணீரால் கழுவினால் எப்படி சுத்தமாகிறதோ அதேபோல் “தல்வீனா கஞ்சி” வயிற்றைச் சுத்தம் செய்கிறது என்று பெருமானார் கூறியதை ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
போர்க்காலத்தில் அரபு ராணுவ வீரர்கள் பார்லியையும், பேரீச்சம்பழங்களையும் உடன் கொண்டு செல்வார்கள். அதைச் சாப்பிடுவதால் உடலுக்கு உடனடி ஊட்டச் சத்தும், புத்துணர்வும் கிடைக்கின்றது என்று அரேபியர்கள் கூறுகின்றனர்.
ஒரு பங்கு பார்லி, ஐந்து பங்கு தண்ணீர் ஆகிய இரண்டையும் கொதிக்க வைத்து அது கால் பாகமாகச் சுண்டிய பின் பயன்படுத்தலாம் என்று இப்னு கய்யூம் (ரஹ்) கூறியிருக்கிறார்.
சாதாரண ஜுரத்தைப் போக்க ஆங்கில மருந்துகளும், ஊசிகளும் குத்திக்கொள்ளும் முறை நம் பழக்கத்தில் வந்து விட்டது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஜுரம் ஏற்பட்டால் அவர்களுக்கு பார்லி அரிசிக் கஞ்சியைத்தான் தருவார்கள் என்று ஹஜ;ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியுள்ளதை ஜாதுல்மாத் ஹதீஸ் உறுதிப்படுத்துகிறது. இறைவே தங்களான தவாரத். இஞ்சீல் ஜபூர் ஆகியவைகளில் ஜவ்வரிசியை பற்றி 21 இடங்களில் சொல்லப்பட்டு உள்ளது.

யுனானி மருத்துவம்
ஒரு பங்கு ஜவ்வரிசியை 15 பங்கு தண்ணீரில் கொதிக்க வைத்து அது மூன்றில் ஒரு பாகம் சுண்டிய பிறகு குடித்தால் சுமார் 100 வியாதிகள் குணமாகும். என்று ஃபிர்தௌஸ் ஹிக்மத் என்னும் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.
பார்லி நீரைக் குடிப்பதால் தொப்பை குறையும். இதன் மாவைப் பிசைந்து மோருடன் குடித்தால் பித்த வாந்தி, தண்ணீர்த்தாகம், நெஞ்செரிச்சல் ஆகியன குணமாகும். தலைப் பொடுகு, சொறி, சிரங்கு ஆகியவை குணமாக பார்லி அரிசி மாவைக் காடியில் கலந்து பூசலாம். மூட்டுவலி, நரம்புவலி குணமாக பார்லி அரிசி யுடன் வில்வப் பழத்தோலைச் சேர்த்து காயில் அரைத்துப் பாதிக்கப்பட்ட இடத்தில் பூசலாம்

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]