நன்கு பழுத்த, காய்ந்த கார மிளகாயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி உள்ளது.
அளவுடன் தினசரி உணவில் சேரும் பச்சை மிளகாயும், அரைத்த கார மிளகாய்ப் பொடியும் உடலில் இருந்து நன்கு வியர்வை வெளியேற உதவுகிறது. இயக்கத்தைத் தூண்டிவிடுகிறது. வெப்பப் பிரதேச நாடுகளில் நோயாளிகளை உடனே வியர்க்கச் செய்யவேண்டுமென்றே கார மிளகாய் சேர்ந்த உணவைச் சாப்பிடச் சொல்வார்கள். இதனால் வியர்வைப் பெருகி காய்ச்சல் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.
மிளகாயின் தோல் நரம்புகளிலும், விதைகளிலும் காப்ஸஸின் என்ற ஆக்கக் கூறுப்பொருள் இருக்கிறது. முழு அளவில் செறிவூட்டப்பட்ட இந்தப் பொருளிலிருந்தே மிளகாய் மூலம் நமக்கு வெப்பம் கிடைக்கிறது.
காப்ஸஸின், நரம்பு வலிகளையும், நோய்களையும், இடுப்பிலும், உடம்பிலும் பயத்தம் பருப்பு அளவில் வரும் வேர்க்குரு போன்ற கழலைகளையும் உடனடியாகக் குணமாக்குகிறது. இவ்விரண்டையும் குணப்படுத்தும் நவீனக் களிம்புகளில் கார மிளகாய் முக்கிய மூலப் பொருளாகும்.
மூலிகை மருத்துவர்கள், அளவுடன் தவறாமல் மிளகாய் சேர்த்து உணவு சமைக்கச் சொல்கிறார்கள். மிளகாய் உடலுக்கு வெப்பத்தைத் தருகிறது. இரத்த ஓட்டம் தங்கு தடையின்றி இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது. வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெறத் தூண்டிக் கொண்டே இருக்கிறது. வைட்டமின் சி இறந்த உயிரணுக்களுக்குப் பதிலாக புதிய உயிரணுக்களை உற்பத்திச் செய்கிறது. செரிமானம் தடையின்றி நடைபெற உமிழ்நீர் நன்கு சுரக்க வைக்கிறது. உமிழ்நீர் நன்கு சுரந்தால் பற்களும் தூய்மையடைகின்றன.
முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் மிளகாய் அதிகம் சேர்த்தால் முகம் சிவப்பாகிவிடும்.
மிளகாய் அளவுக்கு அதிகமானால் குடலுறுப்புகள் கெடவும் வாய்ப்புண்டு. ஆந்திரக்காராகள் போல் கார மிளகாய் அதிகம் சேர்ப்பவர்கள், தினமும் பாசிப்பருப்புடன் முள்ளங்கி, செளசெள, பூசணி, வெள்ளரிக்காய் இவற்றில் எதையாவது ஒன்றை பச்சடியாகச் செய்து சாப்பிட்டால் காரமிளகாய் உதவியுடன் காய்ச்சல் இன்றி நலமாக வாழலாம்.
No comments:
Post a Comment