கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் அதுபோல், சீரகமும் அளவில் சிறிதாக இருந்தாலும் பல்வேறு பயன்களை நமக்கு அள்ளித் தருகிறது.
அதன் சில பயன்கள் இங்கே உங்கள் பார்வைக்கு
*தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஆறவிடுங்கள் இந்த சீரகக் குடிநீரை நாள் முழுவதும் அவ்வப்போது பருகி வாருங்கள்.இப்படிச் செய்து வந்தால் அஜீரணக் கோளறுகள் உங்களுக்கு வராது. அத்துடன், பசியை தூண்டும் சக்தியும் இந்த சீரகக் குடிநீருக்கு உண்டு.
*சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரை குடித்தால் தலைச்சுற்றல் குணமாகும்.
*மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து குடித்தால் வாய்வுத்தொல்லை விலகிவிடும்.
*சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டுவர நரம்புகள் வலுபெறும்.நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
*சிறிது சீரகத்துடன் 2 வெற்றிலை, 4 நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் விலகிவிடும்.
*சீரகத்தை இஞ்சி, எழுமிச்சம்பழச்சாற்றில் கலந்து ஒருநாள் ஊற வைத்து, அதை தினம் இருவேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட பித்தம் காணாமல் போய்விடும்.
No comments:
Post a Comment